ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு அலகில் பணி: ரூ.40,000 ஊதியத்தில் வள பகுப்பாய்வாளர் வேலைவாய்ப்பு!

சென்னை, 06/11/2026:
தமிழ்நாடு அரசு சமூக நீதித் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான மேம்பாட்டுத் திட்டங்களின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் பொருட்டு, ஒப்பந்த அடிப்படையில் 5 வள பகுப்பாய்வாளர்கள் (Resource Analyst) நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான விருப்பக் கோரிக்கைகளைத் (Expression of Interest – EoI) தகுதியுடைய பணிநாடுநர்களிடமிருந்து அரசு வரவேற்றுள்ளது.
தலைமைச்செயலகத் துறைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுச் செயல்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தகுந்த பயனாளிகளை முழுமையாகச் சென்றடைகிறதா என்பதை இந்த கண்காணிப்பு அலகு ஆய்வு செய்யும். குறிப்பாக மாவட்டம், வட்டம் மற்றும் கிராம அளவில் நிலவும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் இடர்பாடுகளைக் கள ஆய்வு செய்து, அதனைக் களைவதற்கான ஆக்கப்பூர்வ வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரைப்பதே இவர்களின் முக்கியப் பணியாகும்.
இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 30,000/- தொகுப்பூதியம் மற்றும் இதர படிகளாக ரூ. 10,000/- என மொத்தம் ரூ. 40,000/- வெளிப்பணி முகமை (Outsourcing Agency) மூலம் வழங்கப்படும். உரிய கல்வித்தகுதி மற்றும் கள அனுபவம் கொண்டவர்கள் இதில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களுடைய விண்ணப்பப் படிவங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 26 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு https://www.tnadw.tn.gov.in இணையதளத்தையோ அல்லது அதிகாரிகளான திரு. டி. முத்து வள்ளியப்பா (7338801242), திரு. குமரன் (8608953516), திரு. என். விவேகானந்தன் (7338801297) ஆகியோரെയோ தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
