புதுச்சேரி

புதுச்சேரியில் முக்கிய பகுதிகளில் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு!

புதுச்சேரி, 03/11/2026: புதுச்சேரி மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு துணை மின் நிலையங்கள் மற்றும் உயர் மின்னழுத்தப் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை (03-11-2026) அன்று பல்வேறு முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் துறை அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வெங்கட்டா நகர் துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 22 கே.வி. சங்கரதாஸ் சுவாமிகள் நகர் ஃபீடரில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 10:00 மணி முதல் மாலை 05:30 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது. இதனால் ரங்கவிலாஸ் தோட்டம், வசந்தம் நகர், சூரிய காந்தி நகர், எழில் நகர், டி.வி. நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ஜெயகராஜ் நகர், கணபதி நகர், செந்தாமரை நகர், விஸ்வநாதன் நகர், மகாத்மா காந்தி வீதி (பகுதி), சாமிபிள்ளைத் தோட்டம், லூர்து நகர், கென்னடி கார்டன், தெபேசன்பேட், வெல்லவாரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இதேபோன்று, பாகூர் 110/22 கே.வி. துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஸ்டீல் மில் மற்றும் இண்டஸ்ட்ரியல் ஃபீடரில் காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதன் காரணமாக காட்டுக்குப்பம் பகுதி, பிள்ளையார்குப்பம் பகுதி, வார்க்கால்ஓடை, மனப்பட்டு, நரம்பை, வள்ளுவர்மேடு, ஈச்சங்காடு, கன்னிக்கோயில் பள்ளித்திட்டு, வம்பாபேட் மற்றும் ஆலடிமேடு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும்.

மேலும் ஏரிப்பாக்கம் 110/22 கே.வி. துணை மின் நிலையத்திற்குட்பட்ட மணல்மேடு ஃபீடரில் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பனையடிக்குப்பம், கரையாம்புத்தூர், சின்ன கரையாம்புத்தூர், மணமேடு மற்றும் கடுவனூர் ஆகிய கிராமப் பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும். பொதுமக்கள் மின்வாரியத்தின் இந்த பராமரிப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்தடை தொடர்பான தகவல்களுக்கு 1800 425 1912 என்ற கட்டணமில்லா எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary: Puducherry’s electricity department has announced power cuts on Tuesday, November 3, 2026, for monthly maintenance work. The 22 kV Sankaradas Swamigal Nagar feeder from Venkata Nagar substation will be shut from 10:00 a.m. to 5:30 p.m., affecting areas including Rangavilas Thottam, Vasantham Nagar, Ezhil Nagar and Kennedy Garden. Bahour’s Steel Mill and Industrial feeder will be off from 10:00 a.m. to 1:00 p.m., affecting Kattukuppam, Pillaiyarkuppam and nearby areas, and the Manalmedu feeder under Eripakkam substation from 10:00 a.m. to 5:00 p.m., affecting Panaiyadikuppam, Karaiyamputhur and nearby villages. The toll-free number 1800 425 1912 is available 24 hours.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன