புயல் காரணமாக விடிய விடிய பெய்த மழையில் நனைந்தபடி பள்ளிக்குச் சென்ற மாணவர்கள்
புதுச்சேரி, நவம்பர் 3: வங்கக்கடலில் உருவான புரசு புயல் காரணமாக புதுச்சேரியில் பெய்த கனமழையால் சாலைகளில் நீர் தேங்கிய நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர்.
புதுச்சேரியில் நவம்பர் 2 ஆம் தேதி காலை 8:30 மணி முதல் நவம்பர் 3 ஆம் தேதி காலை 8:30 மணி வரை 6.5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. புரசு புயல் காரணமாக நல்லிரவு முதலே தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில், அதிகாலையிலும் லேசான முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாததால் மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் குடைகளைப் பிடித்தபடியும், சிலர் நனைந்தபடியும் பள்ளிகளுக்குச் சென்றனர். தொடர் மழை காரணமாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
English summary: Heavy rain from a cyclone in the Bay of Bengal, named Purasu in the report, waterlogged roads in Puducherry, and schools were not given a holiday, so students went to school in the rain, some under umbrellas and some getting wet. Puducherry recorded 6.5 cm of rain between 8:30 a.m. on November 2 and 8:30 a.m. on November 3, with heavy rain from midnight and light to moderate rain in the early hours. Motorists and residents were greatly inconvenienced.