ஓய்வூதியதாரர்கள் இல்லம் தேடி வந்து உயிர்வாழ் சான்றிதழ் வழங்கும் தபால் துறை சேவை
புதுச்சேரி, நவம்பர் 3: ஓய்வூதியதாரர்கள் தங்களது இல்லத்தில் இருந்தபடியே தங்களது வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் வகையில் இல்லம் தேடி வரும் சேவையை இந்திய தபால் துறை வழங்கி வருகிறது.
இதுகுறித்து புதுச்சேரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் இனக்கொளு காவியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஓய்வூதியதாரர்கள் தங்கள் வருடாந்திர உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்க இனி அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வாயிலாக ‘ஜீவன் பிரமான்’ இணையதளத்தில் இல்லம் தேடி வந்து கைரேகை அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரம் அல்லது பேஸ் ஆர்டி செயலி மூலம் தங்களது பகுதியைச் சேர்ந்த தபால் ஊழியர்களின் உதவியுடன் குறைந்த கட்டணத்தில் இந்தச் சேவையைப் பெறலாம்.
மேலும், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மற்றும் பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்களுக்கு இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண், செல்போன் எண், ஓய்வூதிய வழங்கல் ஆணை எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும், கூடுதல் விவரங்களுக்கு 155299 மற்றும் 0413-2342900 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary: The Department of Posts is offering a doorstep service for pensioners to submit their annual life certificate from home, according to a press release from Puducherry Postal Division Senior Superintendent Inakollu Kavya. Pensioners can use fingerprint-based biometric authentication through India Post Payments Bank on the Jeevan Pramaan portal, or the Face RD app, with the help of local postal staff for a small fee. The service is free for Employees’ Provident Fund and defence pensioners, and pensioners should keep their Aadhaar number, mobile number, pension payment order number and pension account details ready; the helplines 155299 and 0413-2342900 were given.