புதுச்சேரி

காரைக்காலில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் விஜயதசமி விழா மற்றும் பேரணி நடைபெற்றது

காரைக்கால், நவம்பர் 3: காரைக்காலில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் சார்பில் விஜயதசமி விழா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 101வது உதய நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது.

இதனை ஒட்டி காரைக்கால் ஏழை மாரியம்மன் கோவிலில் காவி கொடி ஏற்றப்பட்டு, மலர் தூவி கற்பூரம் காட்டி வழிபாடுகள் நடத்தப்பட்டதுடன் பூரண கும்ப மரியாதையும் செய்யப்பட்டது. தொடர்ந்து ஏழை மாரியம்மன் கோவில் பகுதியிலிருந்து தொடங்கிய அணிவகுப்பு மற்றும் ட்ரம்ஸ் இசையுடன் கூடிய பேரணி காரைக்கால் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் 300க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்த தன்னார்வலர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர். காரைக்கால் கடற்கரை பகுதியில் பேரணி நிறைவடைந்ததை தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

English summary: The Rashtriya Swayamsevak Sangh held a Vijayadashami celebration and a rally for its 101st foundation day in Karaikal. A saffron flag was hoisted and prayers were held at the Ezhai Mariamman temple, after which a march with drum music began from the temple and passed through main streets, with more than 300 volunteers and office-bearers taking part. The rally ended at Karaikal beach, where a public meeting was held.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன