புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர்களை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சரத் சவகான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி நகராட்சி ஆணையர் பதவியை கவனித்து வந்த போக்குவரத்து துணை ஆணையர் வினையராஜ், இனி உழவர்கரை நகராட்சி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் தனது போக்குவரத்து துணை ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, உழவர்கரை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த அருண் ஐயாவு புதிய புதுச்சேரி நகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
English summary: Chief Secretary Sharat Chauhan ordered the transfer of the Puducherry and Uzhavarkarai municipal commissioners. Deputy Transport Commissioner Vinayaraj, who held the Puducherry post as additional charge, moves to Uzhavarkarai while keeping his transport role, and Arun Ayyavu, formerly Uzhavarkarai commissioner, becomes Puducherry municipal commissioner.
