முத்தியால்பேட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவப்பிரியா பட்டாசு ஏஜென்சி திறப்பு
புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி முத்தியால்பேட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவப்பிரியா பட்டாசு ஏஜென்சி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் வி.பி.எஸ். ரமேஷ் குமார் ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்து முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெடிக்கும் பட்டாசுகள் மற்றும் மத்தாப்புகள் தரமாகவும் மிகக் குறைந்த விலையிலும் கிடைக்கும் என கடையின் உரிமையாளர் சிவராஜ் தெரிவித்தார். முன்னதாக விழாவிற்கு வருகை தந்த சப்தகிரி அறக்கட்டளை பொறுப்பாளர் ரமேஷ் குமாருக்கு கடையின் உரிமையாளர் சிவராஜ் மற்றும் அவரது மகன் சிவபிரசாத் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.
English summary: Sivapriya Crackers Agency was opened at Muthialpet, Puducherry, ahead of Deepavali. Sapthagiri Trust representative V.P.S. Ramesh Kumar cut the ribbon and made the first sale, and owner Sivaraj said quality crackers would be available at low prices.
