ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றி: ககன்யான் திட்டத்தின் ஆளில்லா சோதனை இந்த ஆண்டு என இஸ்ரோ அறிவிப்பு
புதுச்சேரி, அக்டோபர் 31: என்விஎஸ்-03 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது. திட்டமிட்டபடி புவிவட்டப் பாதையில் வழிகாட்டி செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
ஜிஎஸ்எல்வி மிஷன் வெற்றி அடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேவிக்ஸ் செயற்கைக்கோள் இந்தியாவின் சொத்து என்றும், தேசத்தின் பொக்கிஷம் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா சோதனை பயணம் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்தார். ககன்யான் திட்டம் நாட்டுக்கு மிக முக்கியமான திட்டம் என்றும், இதற்காக 80,000 பரிசோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நமது விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு மற்றும் புத்தி கூர்மையை கண்டு ஒட்டுமொத்த நாடும் பெருமை கொள்வதாக அவர் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
English summary: ISRO’s GSLV rocket lifted off successfully with the NVS-03 satellite, and ISRO announced that the navigation satellite was placed in orbit as planned. ISRO chairman Narayanan declared the mission a success and called the NavIC satellite a national asset. He told Puthiya Thalaimurai that the first uncrewed Gaganyaan test flight will take place this year, and Prime Minister Narendra Modi congratulated the scientists on X.
