புதுச்சேரி

ஏம்பளம் தொகுதியில் பழுதடைந்த தார்சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு

புதுச்சேரி, அக்டோபர் 21: புதுச்சேரி ஏம்பளம் தொகுதிக்கு உட்பட்ட பழுதடைந்த தார்சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுப்பணித்துறை மற்றும் சாலை மேம்பாட்டு துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

பாகூர் கொம்யூன் ஏம்பளம் தொகுதிக்கு உட்பட்ட குடியிருப்பு பாளையம் சுப்பையா நகரிலிருந்து ஆதிங்கப்பட்டு வழியாக பின்னாச்சி குப்பம் மகாத்மா காந்தி இணைப்பு சாலை வரை சுமார் 35 ஆண்டு காலமாக தார்சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இப்பகுதியில் ஐந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பேருந்துகள் இயக்கப்படாததால் மாணவர்களும் பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் கனரக வாகனங்களும் தனியார் பள்ளி வாகனங்களும் இயக்கப்பட்டு வருவதால் புழுதி ஏற்பட்டு மக்கள் வசிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே போர்க்கால அடிப்படையில் தார்சாலை அமைத்து தர வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

English summary: The Communist Party of India submitted a petition to a Public Works and road development official seeking urgent repair of damaged tar roads in the Embalam constituency of Puducherry. The petition says the road from Subbiah Nagar in Kudiyiruppu Palayam via Adingapattu to the Pinnachikuppam Mahatma Gandhi link road has been in poor condition for about 35 years. It also says five buses that once ran there no longer operate, hurting students and residents, and dust from heavy and school vehicles is a problem.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன