புதுச்சேரி

புதுச்சேரி சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் பலம் 12 ஆக உயர்வு: தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வெற்றியால் புதிய திருப்பம்

புதுச்சேரி, அக். 9: புதுச்சேரி சட்டசபையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பலம் மீண்டும் 12 ஆக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கட்சி நிலவரம் புதிய மாற்றத்தைக் கண்டுள்ளது.

புதுவை சட்டமன்ற பொதுத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி மொத்தம் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 12 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. இதில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி, இரண்டிலும் அமோக வெற்றி பெற்றார். பின்னர் சட்ட விதிகளின்படி தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்ததால், பேரவையில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 11 ஆகக் குறைந்தது.

இதையடுத்து காலியான தட்டாஞ்சாவடி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி வாகை சூடினார். இவரது வெற்றியைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் என்.ஆர்.காங்கிரசின் பலம் மீண்டும் 12 ஆக உயர்ந்து ஆளும் கூட்டணிக்குக் கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

தற்போதைய 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தின் கட்சி நிலவரம் வருமாறு: என்.ஆர்.காங்கிரஸ் 12, திமுக 5, பாரதிய ஜனதா கட்சி 4, தமிழக வெற்றிக் கழகம் 2, அ.தி.மு.க. 1, லோக் ஜனசக்தி கட்சி 1, காங்கிரஸ் 1, நேயம் மக்கள் கழகம் 1 மற்றும் சுயேட்சைகள் 3 பேர் என மொத்தம் 30 உறுப்பினர்கள் உள்ளனர்.

English summary: The ruling N.R. Congress’s strength in the Puducherry Assembly has risen again to 12 after its candidate Ashok Anand won the Thattanchavadi by-election. The seat had fallen vacant after Chief Minister N. Rangasamy, who won from both Thattanchavadi and Mangalam, resigned from Thattanchavadi. The report lists the 30-member House as N.R. Congress 12, DMK 5, BJP 4, TVK 2, AIADMK 1, LJP 1, Congress 1, Neyam Makkal Kazhagam 1 and independents 3.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன