தமிழ்நாடு

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கும்பகோணத்திற்கு பணியிட மாற்றம் பெற்ற ஓட்டுநர் முரளி மகிழ்ச்சி

சென்னை, நவம்பர் 3: உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை கவனிப்பதற்காகப் பணியிட மாற்றம் கோரி ஓட்டுநர் முரளி விடுத்த கோரிக்கைக்குப் புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனை முறையாக பராமரிப்பதற்காகப் பணியிட மாற்றம் கோரி ஓட்டுநர் முரளி கண்ணீரோடு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த செய்தி வெளியாகி 24 மணி நேரத்திற்குள் முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் அவருக்கு கும்பகோணம் கோட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது.

தனது கோரிக்கைக்கு உடனடியாக செவிசாய்த்து இடமாறுதல் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் எஸ்டிசி நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், தனக்கும் முதலமைச்சருக்கும் பாலமாக இருந்த ஊடகத்திற்கும் ஓட்டுநர் முரளி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

English summary: Driver Murali had tearfully requested a transfer so he could better care for his son, who has a muscle-wasting disease. According to the report, within 24 hours of the news being aired by Puthiya Thalaimurai, he was given a transfer to the Kumbakonam division on the orders of Chief Minister Vijay. Murali thanked the Chief Minister, the Transport Minister, the State Transport Corporation managing directors and the media.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன