ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் 60 டாஸ்மாக் கடைகள் மூடல்
சென்னை, நவம்பர் 3: ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் இன்று 60 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. சென்னை சைதாப்பேட்டை மற்றும் மத்திய கைலாசம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெருமளவில் கூடினர்.
இதேபோல், ஆந்திர மாநில உள்ளாட்சித் தேர்தல் காரணமாக தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஐந்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்தக் கடைகள் வரும் 5-ஆம் தேதி வரையிலும், வாக்கு எண்ணிக்கையான 7-ஆம் தேதியன்றும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary: About 60 Tasmac liquor shops in Tamil Nadu were closed on November 3 because of a strike by employees, and crowds gathered in areas such as Saidapet in Chennai where shops were shut. Separately, five Tasmac shops on the Tamil Nadu border were closed because of local body elections in Andhra Pradesh. They are to stay closed until the 5th and again on the 7th, the day of vote counting.



