நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு: டெல்லியில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் வரவேற்பு!

நேபாள நாட்டில் அண்மையில் ஏற்பட்ட திடீர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் பத்திரமாக மீட்கப்பட்டு டெல்லி அழைத்து வரப்பட்டனர்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தமிழக சுற்றுலாப் பயணிகள் பலர் சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அவர்களைப் பாதுகாப்பாக மீட்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின்படி, வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனடி மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்கொண்டது.
இதன் பலனாக, நேபாளத்தில் சிக்கியிருந்த தமிழர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தாயகம் திரும்பிய தமிழகப் பயணிகளை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வரவேற்றார். பத்திரமாக தாயகம் திரும்பிய சுற்றுலாப் பயணிகள் மத்திய அரசுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.
English summary: Tourists from Tamil Nadu who were stranded in recent flooding in Nepal were rescued and brought to Delhi’s Indira Gandhi International Airport, where Union External Affairs Minister S. Jaishankar welcomed them. The report says the Tamil Nadu BJP had asked him to arrange the rescue and that the Ministry of External Affairs coordinated it under Prime Minister Narendra Modi’s guidance. The returned tourists thanked the central government.

