புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மரில் ஐசிஎம்ஆர் திட்டப் பணிகள்: கைநிறைய சம்பளத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் கீழ் இயங்கும் ஐசிஎம்ஆர் (ICMR) ஆராய்ச்சி திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியாளர்களை நியமிப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதில் திட்ட விஞ்ஞானி-I (மருத்துவம்) 4 இடங்கள் (மாத சம்பளம் ₹67,000 + 20% HRA), திட்ட விஞ்ஞானி-II (தரவு மேலாளர், தகவல் தொழில்நுட்ப மேலாளர், புள்ளியியல் நிபுணர்) தலா 1 இடம் (மாத சம்பளம் ₹67,000 + 20% HRA), திட்ட விஞ்ஞானி-III (மருத்துவம்) 1 இடம் (மாத சம்பளம் ₹93,000 + 20% HRA) நிரப்பப்பட உள்ளன. மேலும், திட்ட தொழில்நுட்ப உதவியாளர்-II பிரிவில் நிர்வாக உதவியாளர், அரசு தொடர்பு அலுவலர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்-III பிரிவில் ஐடி ஆதரவு, தரவு ஆதரவு (மாத சம்பளம் ₹28,000 + 20% HRA) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

இப்பணிகள் அனைத்தும் அதிகபட்சமாக 48 மாத கால ஒப்பந்த அடிப்படையில் அமையவுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய சான்றிதழ்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் இறுதித் தேர்வு நடத்தப்படும் என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன