மணவெளி தொகுதியில் ஆலய திருப்பணிகளுக்கான நிதி உதவியை வழங்கினார் சட்டமன்ற உறுப்பினர் ராமு
புதுச்சேரி, அக்டோபர் 21: மணவெளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள ஆலயங்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளுக்காக இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.33.55 லட்சம் நிதி உதவியை சட்டமன்ற உறுப்பினர் ராமு ஆலய நிர்வாகிகளிடம் வழங்கினார்.
பூரணாங்குப்பம் ஸ்ரீ திரௌபதி அம்மன் தேவஸ்தானத்திற்கு மூன்றாம் தவணையாக 11 லட்ச ரூபாயும், அபிஷேகப்பாக்கம் ஸ்ரீ போத்தியம்மன் ஆலயத்திற்கு மூன்றாம் தவணையாக 15 லட்ச ரூபாயும் இந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது. மேலும் இடையார்பாளையம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் ஆலயத்திற்கு 5 லட்ச ரூபாயும், புதுக்குப்பம் மாரியம்மன் ஆலயம் மற்றும் மஞ்ச ஈஸ்வரர் ஆலயத்திற்கு தவணைத் தொகையாக 2.5 லட்சம் ரூபாய் என மொத்தம் 33.55 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஆலய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.