விஜய் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
புதுச்சேரி, அக்டோபர் 28: விஜய் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நஷாமுக்த் யுவா விக்சித் பாரத் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் வி.பி. பாலசந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பி. ஜானகிதேவி, முதல்வர் முனைவர் எஸ். செந்தமிழ் செல்வி, புதுச்சேரி மாநில இயக்குனர் டிரவின் சார்லஸ்டன், கதிர்காமம் வட்ட காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார், உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் மற்றும் தொல்லியல் துறை ஆர். விஜய் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ஜே. ஆனந்தி வரவேற்புரை வழங்கினார். தொடர்ந்து வேதியியல் துறை பேராசிரியர் ஜி. நந்தினி தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் மூலம் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள் குறித்தும், போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்கு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மை பாரத் அலுவலக உதவியாளர் ஆர். சாரதி மற்றும் தேசிய இளைஞர் தொண்டர்கள் ஓ. தினேஷ், தெய்வானை ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நிறைவாக வேதியியல் துறை பேராசிரியர் சாந்தி நன்றியுரை வழங்கினார்.