புதுச்சேரி

புதுச்சேரி கடல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அனிபால் கென்னடி கோரிக்கை

புதுச்சேரி, அக்டோபர் 25: புதுச்சேரி கடல் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் கலப்பதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான அனிபால் கென்னடி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி கடல் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் கலப்பதன் காரணமாக சமீபத்தில் மீனவர்களின் வலைகளில் மீன்களுக்கு பதிலாக பிளாஸ்டிக் பாட்டில்களே கிடைப்பதாகவும், மீன்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சுற்றுலா வருவோர் பிளாஸ்டிக்கை முறையாக குப்பைத் தொட்டிகளில் போடாததால் இந்த நிலை உருவாகியுள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனைத் தடுத்து நிறுத்தத் தவறினால் எதிர்காலத்தில் சூழல் கடுமையாக கெடும் அபாயம் உள்ளதாகவும், அரசு இதில் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக, கடலுக்குச் செல்லும் வடிகால் வாய்க்கால்களின் இறுதியில் வலைகளைக் கட்டி பிளாஸ்டிக் பொருட்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க என்ஆர் காங்கிரஸ் – பாஜ அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அனிபால் கென்னடி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன