தமிழ்நாடு

வாக்களித்தவர்களும் புலம்பும் வகையில் ரீல்ஸ் ஆட்சி நடக்கிறது ஸ்டாலின் விமர்சனம்

சென்னை, அக்டோபர் 25: தீய சக்தி யார் என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்துக் கொண்டிருப்பதாக திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பேசிய அவர், 2021ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு அளித்த முதல் பேட்டியில், வாக்களித்தவர்கள் மட்டுமல்லாமல் வாக்களிக்காதவர்களும் இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோம் என்று வருத்தப்படும் அளவிற்குத் தமது ஆட்சி இருக்கும் என்று கூறியதாகச் சுட்டிக்காட்டினார்.

ஆனால் இன்றைக்கு வாக்களிக்காதவர்கள் மட்டுமல்லாமல் வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில்தான் இந்த ரீல்ஸ் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விலைவாசி ஒரு பக்கம் உயர்ந்து வரும் நிலையில் நிர்வாகம் சீர்குலைந்து போயிருப்பதாகவும், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் பலாத்காரம் என்ற செய்திகள் இல்லாத நாளே இல்லை என்று அவர் வேதனை தெரிவித்தார்.

சிங்கப்பெண் படையையே காப்பாற்ற வேண்டிய நிலையைத் தீய சக்தியின் ஆட்சி ஏற்படுத்தியுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன