புதுச்சேரி

காரைக்கால் விடுதிநாத சுவாமி கோவிலில் மண்டல அபிஷேக பூர்த்தி விழா மற்றும் காசோலை வழங்கல்

காரைக்கால், அக்டோபர் 26: காரைக்கால் மாவட்டம் விழுதியூர் ஸ்ரீ விமலாம்பிகை சமேத ஸ்ரீ விடுதிநாத சுவாமி ஆலயத்தில் 48 நாட்கள் மண்டல பூஜை நிறைவை ஒட்டி மண்டல அபிஷேக பூர்த்தி விழா நடைபெற்றது.

இதனை ஒட்டி யாகசாலை பூஜைகள் மற்றும் மகா பூர்ணாகுதி நடைபெற்றதை தொடர்ந்து, ஸ்ரீ விடுதிநாத சுவாமி மற்றும் ஸ்ரீ விமலாம்பிகை அம்மனுக்கு மகா கலச அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் நிரவி திருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எம் மீனாட்சி சுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் நிறைவாக கோவில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக புதுச்சேரி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வழங்கப்பட்ட ரூபாய் 20 லட்சத்திற்கான காசோலையை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எம் மீனாட்சி சுந்தரம் திருப்பணி குழுவினருடன் இணைந்து வழங்கினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன