புதுச்சேரி

இடையார்பாளையம் ஜலகண்டேஸ்வரர் ஆலய குளக்கரையில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி அரியாங்குப்பம் கம்யூன் மணவெளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையார்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தின் அருகில் உள்ள குளத்தில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

பொதுப்பணித்துறை மூலம் 14.15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள இப்பணிகளின் துவக்க விழாவிற்கு மணவெளி சட்டமன்ற உறுப்பினர் ராமு தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர் பாசன கோட்ட செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவி பொறியாளர் ஸ்ரீநாத், இளநிலை பொறியாளர் அருள் முருகன் மற்றும் ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

English summary: A bhoomi puja was held for building a protective wall at the pond beside the Jalakandeswarar temple in Idayarpalayam, Manavely constituency, Puducherry, at an estimated cost of Rs 14.15 lakh through the Public Works Department. Manavely MLA Ramu presided and started the work, with PWD engineers and local residents attending.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன