காலாப்பட்டில் டெங்கு, எச்.ஐ.வி மற்றும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
புதுச்சேரி, அக்டோபர் 31: புதுச்சேரி அரசு நலவழித்துறை மற்றும் காலாப்பட்டு அரசு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் ஆகியவை பிம்ஸ் மருத்துவமனை இணைந்து டெங்கு, எச்.ஐ.வி மற்றும் புகையிலை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
மருத்துவ அதிகாரிகள் பிரதீப்குமார், சூர்யா மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் ராதிகா, பத்மபிரியா ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும், குறுநாடகங்கள் நடத்தியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் சுகாதார உதவி ஆய்வாளர்கள் மதிவானன், அன்பு முருகன் உள்ளிட்ட சுகாதாரத்துறை பணியாளர்கள் கலந்துகொண்டு டெங்கு தடுப்பு முறைகள் மற்றும் நோய் அறிகுறிகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர்.
English summary: The Puducherry Health Department, the Kalapet health and wellness centre and PIMS hospital held an awareness rally on dengue, HIV and tobacco eradication, with college students taking part. Medical officers Pradeepkumar and Surya and coordinators Radhika and Padmapriya flagged off the rally. Students carried placards, staged skits and distributed leaflets, and health inspectors explained dengue prevention and symptoms.
