மத்திய அரசு அறிவிப்பு: இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜனவரி 25-ல் தொடக்கம்
புதுச்சேரி, அக்டோபர் 31: நாடு முழுவதும் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஜனவரி மாதம் 25ஆம் தேதி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் கணக்கெடுப்பு ஆணையரான திரு மிருதுஞ்சய குமார் நாராயன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, பிப்ரவரி 28ஆம் தேதி வரை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என்றும், மார்ச் 1ஆம் தேதி நள்ளிரவு 12 மணியாக இந்த கணக்கெடுப்பிற்கான குறிப்பு தேதி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு மறுஆய்வு சுற்று நடைபெறும் என்றும், அதற்கு முன்னதாக ஜனவரி 10 முதல் 24 வரை சுய கணக்கெடுப்பிற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மணிப்பூரில் மறு அறிவிப்பு வரும்வரை இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள கோவா, உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், லடாக் மற்றும் பனிப்பொழிவு அதிகம் உள்ள இமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary: The central government has announced that the second phase of the national census will begin on January 25 and run until February 28, with March 1 midnight as the reference date, according to Registrar General and Census Commissioner Mrityunjay Kumar Narayan. Self-enumeration will be available from January 10 to 24, with a review round from March 1 to 5; the exercise will not be held in Manipur until further notice, nor in Goa, Uttar Pradesh, Punjab, Uttarakhand, Ladakh, Himachal Pradesh and Jammu and Kashmir.



