புதுச்சேரி

புதுச்சேரியில் டிஸ்லெக்சியா மற்றும் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு பயிலரங்கம்

புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் டிஸ்லெக்சியா மற்றும் ஆட்டிசம் குறித்த ஒரு நாள் திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

பாண்டிச்சேரி டிஸ்லெக்சியா அசோசியேஷன், புதுச்சேரி ஆட்டிசம் வெல்பேர் சொசைட்டி மற்றும் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா ஹெச்எஸ்எஸ் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. காலை அமர்வில் டிஸ்லெக்சியா குறித்தும், பிற்பகல் அமர்வில் ஆட்டிசம் குறித்தும் சிறப்பு அமர்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

இந்த பயிலரங்கில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், நலத்துறை அமைச்சர் வி.பி. சிவகொழுந்து, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி, சமூகநலத்துறை இயக்குனர் திருமதி ராகினி, சமக்ரா சிக்ஷா மாநிலத் திட்ட இயக்குனர் திருமதி எழில் கல்பனா, மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை இணை இயக்குனர் திருமதி புவனேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

English summary: A one-day skill development and awareness workshop on dyslexia and autism was held at Kamarajar Manimandapam in Puducherry, organised jointly by the Pondicherry Dyslexia Association, Puducherry Autism Welfare Society and Bridges Learning Vidyalaya HSS. The morning session covered dyslexia and the afternoon session autism. Chief Minister Rangasamy attended as chief guest, along with Ministers Namachivayam and Sivakolundu and others.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன