பெட்டிட் செமினார் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் அமைந்துள்ள பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளி அரங்கத்தில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரோட்டரி கிளப் ஆஃப் பாண்டிச்சேரி மற்றும் பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இணையவழி மோசடிகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் ஆஃப் பாண்டிச்சேரி தலைவர் ஒலவிங்கா ஹோக்கோ, பாயபோலா, ரோட்டரி மாவட்ட ஆளுநர் டாக்டர் வைத்தியநாதன் மற்றும் முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரமேஷ் பாபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பெட்டிட் செமினார் மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருட்தந்தை ஆரோக்கியராஜ் மற்றும் அருண் ஜபராய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேலும் நெட்டப்பாக்கம் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் வட்ட காவல் ஆய்வாளர் கீர்த்தி வர்மன், புதுச்சேரி போதைப்பொருள் தடுப்பு பணிக்குழு காவல் ஆய்வாளர் ரமேஷ், சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிமொழி ஆகியோர் கருத்துரையாளர்களாகப் பங்கேற்று மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.
