விக்ஷித் பாரத் இளம் தலைவர்கள் பேச்சுப் போட்டி: மாணவர்கள் பங்கேற்க அழைப்பு
புதுச்சேரி, நவம்பர் 3: விக்ஷித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல் 2027 திட்டத்தின்கீழ், மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி புதுச்சேரியில் வரும் நவம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.
புதுச்சேரி மைபாரத் திட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விவரங்களை வெளியிட்டனர். இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் சார்பில் 2047ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் நவம்பர் 12ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெற உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இப்போட்டியில் 18 முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம் என அழைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவார்கள். மேலும் அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவார்கள் என்றும், இந்த வாய்ப்பினை மாணவர்களும் இளைஞர்களும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மைபாரத் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
English summary: A district-level speech competition under the Viksit Bharat Young Leaders Dialogue 2027 will be held in Puducherry on November 12 from 9 a.m. at a private school, on the topic ‘One Nation One Election’, MY Bharat Puducherry officials told reporters. Students and youths aged 18 to 25 can take part, the top three at the district level will qualify for the state-level contest, and state winners will go on to the national level. The scheme is run by the Union youth affairs and sports ministry with the aim of making India a developed nation by 2047.