புதுச்சேரி

புதுச்சேரியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா கோலாகலம்

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி விழாவும் மற்றும் 64வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பாண்டியன் ஹோட்டலில் நிறுவப்பட்டுள்ள தேவர் ஐயாவின் திருவுருவ சிலைக்கு பொங்கல் வைத்து, வாழை அணிவித்து குருபூஜை விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ பாண்டியன் ஹோட்டலின் நிறுவனர் சங்கையா தேவர் தலைமை தாங்கினார். உழவர்கரை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசுவாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், ஊர் பொதுமக்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் வையாபுரி மணிகண்டன், முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மற்றும் செங்குட்டுவன், பிஜேபி நாகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அகில இந்திய முக்குளத்தூர் பாசரையின் தலைவர் சங்கையா தேவர், செயலாளர் அழகர் தேவர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், புதுவை மாநில தேவர் பேரவையின் நிர்வாகிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

முன்னதாக கடந்த அக்டோபர் 30 அன்று புதுச்சேரியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாக்கள் பல்வேறு அமைப்புகளின் சார்பில் நடத்தப்பட்டு, தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

English summary: The 119th birth anniversary and 64th Guru Puja of Pasumpon Muthuramalinga Thevar were observed at Reddiarpalayam in Puducherry, where Pongal was offered and a garland placed at his statue at Sri Pandian Hotel. Hotel founder Sankaiya Thevar presided, Uzhavarkarai MLA Dr. K. Narayanasamy paid floral tributes as special guest, and food was served to more than 400 local people. Office-bearers of various organisations and of the Puducherry State Thevar Peravai attended; the report notes that similar events were held in Puducherry on October 30.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன