புதுச்சேரி

ஏம்பளம் தொகுதி ஆதிக்கம் மற்றும் சார்காசிமேட்டில் குடிநீர் குழாய் வசதியை எம்எல்ஏ மோகன்தாஸ் திறந்து வைத்தார்

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட ஆதிக்கம் பட்டு மற்றும் சார்காசிமேடு கிராமத்தில் புதிதாக உருவான குடியிருப்புப் பகுதிகளுக்கு குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாசிடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று அவரது பரிந்துரையின் பேரில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் ரூ. 10 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் வசதி அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சட்டமன்ற உறுப்பினர் மோகன்தாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புப் பூஜைகள் செய்து குடிநீர் குழாயை மக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

English summary: Residents of Athikkampattu and Sarkasimedu villages in the Embalam constituency of Puducherry asked MLA Mohandas for drinking water pipe facilities for newly formed residential areas. On his recommendation, the Bahour Commune Panchayat installed new drinking water pipelines at a cost of Rs 10 lakh, and the facility was inaugurated on the day of the report with the MLA as special guest. Bahour Commune Panchayat Commissioner Sadasivam, assistant engineer Balamurugan, NR Congress members and residents attended.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன