தமிழ்நாடு
1987 இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகள் நினைவு நாள்: பென்னாகரத்தில் ஜி.கே.மணி தலைமையில் நினைவஞ்சலி!

பென்னாகரம், செப். 17:
1987-ஆம் ஆண்டு நடைபெற்ற இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த சமூகநீதி தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு, பென்னாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பென்னாகரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமைக்காகவும் இட ஒதுக்கீட்டிற்காகவும் களமாடி இன்னுயிர் ஈந்த தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், தியாகிகளின் ஈகத்தையும் போராட்ட பங்களிப்பையும் நிர்வாகிகள் நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்வில் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டு சமூகநீதி தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
