புதுச்சேரி

புதுச்சேரியில் 3,50,793 குடும்ப அட்டைகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்பை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி மாநிலத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ரங்கசாமி திலாசுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள நியாயவிலைக் கடையில் தொடங்கி வைத்தார்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ சர்க்கரை, இரண்டு கிலோ சூரியகாந்தி எண்ணெய், ஒரு கிலோ கடலை பருப்பு, 500 கிராம் ரவை மற்றும் 500 கிராம் மைதா அடங்கிய மளிகை பொருட்கள் இந்த தொகுப்பில் வழங்கப்பட உள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 2,66,874 குடும்ப அட்டைதாரர்களுக்கும், காரைக்காலில் உள்ள 60,389 குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாகேவில் உள்ள 7,942 குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஏனாமில் உள்ள 1,558 குடும்ப அட்டைதாரர்களுக்கும் என மொத்தம் 3,50,793 குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

பொதுமக்கள் தீபாவளி வரை நியாயவிலைக் கடை மூலம் இந்த பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

English summary: Chief Minister Rangasamy launched the free Diwali gift pack scheme for ration card holders at a ration shop in Thilaspet, Puducherry. The pack contains two kg of sugar, two kg of sunflower oil, one kg of Bengal gram dal, 500 g of semolina and 500 g of maida. It will be given to 3,50,793 ration card holders in total, including 2,66,874 in Puducherry, 60,389 in Karaikal, 7,942 in Mahe and 1,558 in Yanam, and people can collect it from ration shops until Diwali.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன