சென்ட்ரல் பேங்க், ஐஓபி வங்கிகளை தனியார் மயமாக்க ஒன்றிய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை!

புதுச்சேரி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா (Central Bank of India) மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank – IOB) ஆகிய இரண்டையும் தனியார் மயமாக்க ஒன்றிய அரசுக்கு நிதி ஆயோக் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரை செய்துள்ளது.
மத்திய பட்ஜெட் 2021-22 கூட்டத்தொடரின் போது, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று ஒன்றிய நிதியமைச்சர் அறிவித்திருந்தார். இந்த தனியார்மய நடவடிக்கைக்குத் தகுதியான வங்கிகளைத் தேர்வு செய்யும் பொறுப்பு நிதி ஆயோக் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனையடுத்து நிதி ஆயோக் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றை தனியார்மயமாக்குவதற்குப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரை ஒன்றிய அமைச்சரவை மற்றும் நிதியமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளது.
நிதி ஆயோக்கின் இந்தப் பரிந்துரை பொதுத்துறை வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டு வருகின்றன.
English summary: The article says NITI Aayog has officially recommended to the Union government that Central Bank of India and Indian Overseas Bank be privatised. It recalls that the Union Finance Minister had announced during the Union Budget 2021-22 session that two public sector banks would be privatised and that NITI Aayog was tasked with selecting them. The recommendation is to be sent to the Union Cabinet and Finance Ministry, and bank employee unions are reported to be planning protests against it.
