புதுச்சேரி

மண்ணாடிப்பட்டு ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் அமைச்சர் ஏ.நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து வாழ்த்து!

புதுச்சேரி:

புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயத்தை, ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்துப் பெற்றனர்.

ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் நிர்வாகக் குழுவிற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்று புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், பொறுப்பேற்றுக்கொண்ட புதிய நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயத்தை நேரில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது அமைச்சருக்கு அவர்கள் சால்வை அணிவித்து, பூங்கொத்து வழங்கி தங்களது வாழ்த்துகளையும் மரியாதையையும் தெரிவித்துக் கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற உரையாடலின்போது, ஜாமியா பள்ளிவாசல் மற்றும் அதனைச் சார்ந்த பகுதி மக்களின் நலன்கள், தேவைகள் குறித்து நிர்வாகிகளுடன் அமைச்சர் கேட்டறிந்தார். மேலும் அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் சமூகக் கட்டமைப்புப் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு எப்போதும் துணைநிற்கும் என்று அமைச்சர் உறுதி அளித்தார்.

பள்ளிவாசல் பணிகளையும், மக்கள் சேவையையும் எவ்வித பாகுபாடுமின்றி அர்ப்பணிப்புடன் முன்னெடுத்துச் செல்லுமாறு புதிய நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் அறிவுறுத்தியதோடு, அவர்களின் புதிய நிர்வாகப் பணிகளுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

English summary: The newly elected office-bearers of the Jamia Masjid mosque in Mannadipet met Home Minister A. Namassivayam to pay their respects after the recent mosque committee election. The minister asked about the needs of the mosque and local residents, assured them of government support for people’s requests, and advised them to carry out their work without discrimination.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன