புதுச்சேரி

10-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்: புதுச்சேரி மூத்த பத்திரிகையாளரின் மகளுக்கு தவெக தலைவர் விஜய் விருது வழங்கிப் பாராட்டு!

புதுச்சேரி:

பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரின் மகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசு வழங்கிப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பச்சையப்பன் – தமிழரசி தம்பதியரின் மகள் சனா ஸ்ரீ. இவர் விழுப்புரம் நியூ ஜான் டூவி பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். அண்மையில் வெளியான 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் மாணவி சனா ஸ்ரீ மிகச் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்று, பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கல்வித் துறையில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை நீலாங்கரையில் கல்வி விருது வழங்கும் பாராட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் விழுப்புரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் கலந்துகொண்ட மாணவி சனா ஸ்ரீக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கரங்களால் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசினை வழங்கி வாழ்த்தினார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று நடிகர் விஜய்யிடம் நேரில் விருது பெற்ற மாணவி சனா ஸ்ரீக்கு புதுச்சேரி பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

English summary: Sana Sri, daughter of Puducherry senior journalist Pachaiyappan and Tamilarasi, who studied at New John Dewey school in Villupuram and scored high marks in the Class 10 public examination, received a certificate and an incentive prize from TVK president Vijay. She was honoured at an education awards event held by the TVK at Neelankarai, Chennai, for toppers from five districts including Villupuram.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன