தமிழ்நாடு

துரைமுருகன் இல்லத் திருமண சர்ச்சை: திமுகவினர் கொள்கையேந்தி வாழ்பவர்கள் – மு.க. ஸ்டாலின் விளக்கம்

சென்னை, நவம்பர் 7: முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இல்லத் திருமண விழாவில் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டது தொடர்பாக எழுந்த சர்ச்சைகளுக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திமுகவினர் வெறும் கொடியேந்தி நிற்பவர்கள் மட்டுமல்ல, கொள்கையேந்தி வாழ்பவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல, அவற்றை வாழ்ந்து காட்டுவதற்கும் உரியவை என்பதை திமுக உணர்த்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

துரைமுருகன் இல்லத் திருமண நிகழ்வில் வேத மந்திரங்கள் ஓதப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்திய நிலையில், இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன