தமிழ்நாடு
மணல் குவாரி முறைகேட்டு வழக்கு: திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சென்னை, நவம்பர் 7: காவிரி ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரிகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான ராமச்சந்திரன் மற்றும் கரிகாலன் உள்ளிட்டோருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, கரூரில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் சுகுமார் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.