புதுச்சேரி
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி புதுச்சேரி தலைமை செயலகத்தில் நேர்மைக்கான உறுதிமொழி ஏற்பு
புதுச்சேரி, அக்டோபர் 27: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை ஒட்டி புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகத்தில் நேர்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் சரத் சவகான் நேர்மைக்கான உறுதிமொழியை வாசிக்க, தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, அரசுச் செயலர் முத்தம்மா உறுதிமொழியை தமிழில் வாசிக்க, அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


