புதுச்சேரி காமராஜர் சாலையில் ஸ்ரீ ஷண்முகா ஹைப்பர்மால் வணிக வளாகத்தை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்
புதுச்சேரி, அக்டோபர் 27: புதுச்சேரி காமராஜர் சாலையில் ஸ்ரீ ஷண்முகா சில்க்ஸ் நிறுவனத்தின் புதிய வணிக வளாகமான ஸ்ரீ ஷண்முகா ஹைப்பர்மால் திறப்பு விழா முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீ ஷண்முகா ஹைப்பர் மாலின் புதிய திறப்பு விழாவிற்கு தலைமை தாங்கிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வணிக வளாகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து முதல் விற்பனையை அவர் துவக்கி வைக்க, முதல் விற்பனை பொருளை அமைச்சர் விபி சிவகொழந்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நேரு என்கின்ற குப்புசாமி, மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாடிக்கையாளர்களின் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் ஒன் ஸ்டாப் ஷாப்பிங் என்ற புதிய கருத்தாக்கத்தில் இந்த ஹைப்பர்மால் தொடங்கப்பட்டுள்ளது. இதில் வீட்டு உபயோக பொருட்கள், அன்றாட தேவைகளுக்கான பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான பொருட்கள் ஒரே இடத்தில் வாங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


