புதுச்சேரி

புதுச்சேரியில் ஐந்து முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் ஒலிபெருக்கி அமைப்புகள் நிறுவல்

புதுச்சேரி, அக்டோபர் 31: பொதுமக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தவும் புதுச்சேரியில் ஐந்து முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் ஒலிபெருக்கி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

யாக்டோ பவுண்டேஷனின் சார்பில் உதயஞ்சாலை சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், அஜந்தா சிக்னல், முருகா தியேட்டர் சிக்னல் மற்றும் இந்திரா காந்தி சிக்னல் ஆகிய ஐந்து முக்கிய இடங்களில் இந்த அமைப்புகள் வழங்கப்பட்டு நிறுவப்பட்டன. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி காவல்துறை டிஐஜி சத்தியசுந்தரம், எஸ்எஸ்பி திவ்யா, எஸ்பி ரக்ஷணா சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். யாக்டோ பவுண்டேஷனின் நிறுவனர் சதீஷ்குமார் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மேலும் காவல் ஆய்வாளர் வெங்கடாசலபதி மற்றும் காவல்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த ஒளிப்பெருக்கி அமைப்புகள் வாயிலாக போக்குவரத்து விதிமுறைகள், சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் அவசியம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போக்குவரத்து சட்டங்களை பின்பற்ற வேண்டியதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு ஒளிப்பதிவுகள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வை வளர்ப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

English summary: Public-address systems for road-safety awareness have been installed at five major traffic signals in Puducherry, provided by the Yakto Foundation, at Udayan Salai, Raja Theatre, Ajantha, Murugha Theatre and Indira Gandhi signals. DIG Sathiyasundaram, SSP Divya and SP Rakshana Singh attended, and recorded messages on traffic rules, helmets and drink-driving will be played continuously.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன