புதுச்சேரி

காலாப்பட்டில் கோவில் இடத்தில் அனுமதி இன்றி கட்டிய கடைக்கு அதிகாரிகள் சீல்

புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் உள்ள அருள்மிகு செங்கேனி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் மூடி சீல் வைத்து உத்தரவிட்டனர்.

சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை கொண்டுள்ள இக்கோவில் நிலத்தை ஒரு தரப்பினர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருவதாகக் காலாப்பட்டு மீனவர் கிராம பஞ்சாயத்து சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனினும் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றதால், காலாப்பட்டு கிராம பஞ்சாயத்து தலைவர் சேகர் மற்றும் செயலாளர் காமராஜ் தலைமையில் பொதுமக்கள் ஈசிஆர் மறியல் போராட்டத்தில் ஈடுபட ஜெயா தியேட்டர் அருகே கூடினர்.

இதனைத் தொடர்ந்து காலாப்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, புதுச்சேரி இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரன் உத்தரவின்பேரில், உழவர்கரை நகராட்சி ஆணையர், உழவர்கரை தாலுக்கா தாசில்தார் மற்றும் தனி அதிகாரியான உதவி ஆய்வாளர் சிவபிரகாசம் ஆகியோர் முன்னிலையில் சர்ச்சைக்குரிய கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன