புதுச்சேரி

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் பாஜக தலைவர் மரியாதை

புதுச்சேரி, நவம்பர் 1: அகில இந்திய முக்குளத்தூர் பாசையின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது பிறந்தநாள் மற்றும் 64வது குருபூஜை விழா புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் வி.பி. ராமலிங்கம், உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நாராயணசுவாமி மற்றும் முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

அகில இந்திய முக்குளத்தோர் பாசரை சார்பாக நடத்தப்பட்ட இந்த விழாவில் 300க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டதுடன், விழாவில் செங்குற்றுவன், நாகேஸ்வரன், சுரேஷ், அருணகிரி, பொற்சிழியன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன