புதுச்சேரி

லாஸ்பேட்டையில் இலவச மருத்துவ முகாம் அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது

புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவ முகாம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த இலவச மருத்துவ முகாமை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் வி.பி. சிவகொழுந்து மற்றும் சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் வி.பி.எஸ். ரமேஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கித் துவக்கி வைத்தனர்.

இந்த முகாமில் சர்க்கரை நோய் பரிசோதனை, இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு பரிசோதனை, வலி நிவாரண ஆலோசனை மையம், பொது மருத்துவ ஆலோசனை, குழந்தைகளுக்கான வரம்பியல் வளர்ச்சிப் பிரச்சனை ஸ்கிரீனிங், இரத்த அழுத்த பரிசோதனை, மூட்டு இயக்கத்திறன் மதிப்பீடு, முதுகுவலி மற்றும் முதுகு தண்டு வளைவு ஸ்கிரீனிங், நரம்பியல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை உள்ளிட்டவை அளிக்கப்பட்டு மருத்துவ ஆலோசனைகளும் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.

இலவச மருத்துவ முகாமில் லாஸ்பேட்டை தொகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்ச்சியில் லயன்ஸ் கிளப் சென்ட்ரல் நிர்வாகிகள், லாஸ்பேட்டை என்.ஆர். காங்கிரஸ் மற்றும் சப்தகிரி அறக்கட்டளையின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

English summary: A free medical camp was held at the Lawspet MLA’s office in Puducherry by the Sri Sapthagiri Trust, inaugurated by Civil Supplies and Consumer Affairs Minister V.P. Sivakolundu and trust representative V.P.S. Ramesh Kumar. The camp offered diabetes, blood oxygen and blood pressure tests, general medical consultation, pain relief advice and orthopaedic and neurological checks, with medical advice and tablets given. Many residents of the constituency benefited.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன