லாஸ்பேட்டையில் புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்
புதுச்சேரி, நவம்பர் 1: புதுச்சேரி லாஸ்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட ஜீவானந்தபுரம் பகுதியில் ரூ.42.94 லட்சம் செலவில் புதிய பாலம் அமைக்கும் பணி இன்று பூமி பூஜை செய்து துவக்கி வைக்கப்பட்டது.
லாஸ்பேட்டை ஜீவானந்தபுரம் ஸ்ரீராம் நகர், ஜிப்மர் மற்றும் தமிழக பகுதிகளுக்கு செல்லும் பெரிய வாய்க்காலில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட வருட கோரிக்கையாக இருந்தது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் வி.பி. சிவகொழுந்து அவர்களின் பரிந்துரையின் பெயரில் பொதுப்பணித்துறை பாசன பிரிவின் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான பூமி பூஜை விழா சிறப்பாக நடைபெற்ற நிலையில், அமைச்சர் வி.பி. சிவகொழுந்து புதிய பாலம் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் வி.பி.எஸ். ரமேஷ் குமார், திருச்சிற்றம்பளம் பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன், பொதுப்பணித்துறை பாசன பிரிவின் செயற்பொறியாளர் பக்தவச்சலம், உதவி பொறியாளர் லூயி பிரகாசம், இளநிலை பொறியாளர் தீபன், முருகன் மற்றும் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அமைப்பினர், பொதுப்ப பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
