புதுச்சேரி

புதுவை இதயா மகளிர் கல்லூரியில் புனித சூசையப்பர் புதிய கட்டட திறப்பு விழா

புதுச்சேரி, நவம்பர் 1: புதுவை இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புனித சூசையப்பர் திருப்பெயரில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தின் திறப்பு விழா நேற்று காலை 10:30 மணிக்கு வரவேற்பு நடனத்துடன் இனிதே துவங்கியது.

மதர் பாரியாமேரி ஜாஸ்மின் செல்வராணி அவர்கள் புதிய கட்டடத்தை திறந்து வைத்து சிறப்பித்தார். பாண்டி கடலூர் உயர் மறை மாவட்ட முதன்மை குரு திரு குழந்தைசாமி அவர்கள் கட்டடத்தை புனித நீர் தெளித்து மந்திரித்தார்.

இவ்விழாவில் சபை பொது ஆலோசகர்கள், மாநில பொது ஆலோசகர்கள், இதயா இல்ல அன்னை, பெற்றோர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதயா கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் ஆ. பாத்திமா அவர்கள் வரவேற்புரை வழங்கி சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கினார். புதிய கட்டடத்தை கட்டிய பொறியாளர் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் மேடையில் மரியாதை செய்யப்பட்டதுடன், கணினி அறிவியல் துறை பேராசிரியை திருமதி பிரின்சி மெடோனா நன்றியுரை வழங்கினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன