புதுச்சேரி

புதுச்சேரியில் சர்தார் படேல் பிறந்தநாள்: ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர், அமைச்சர் நமச்சிவாயம்!

புதுச்சேரி, அக். 31: புதுச்சேரி லோக் நிவாஸ் வளாகத்தில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் மற்றும் உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் துணைப் பிரதமருமான சர்தார் வல்லபாய் படேல் இரும்பு மனிதர் என்று போற்றப்படுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் இந்த ஒற்றுமைக்கான ஓட்டம் (Run for Unity) நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

லோக் நிவாஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாகப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன், உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஓட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் திரளாகக் கலந்துகொண்டு ஒற்றுமைக்கான ஓட்டத்தில் பங்கேற்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன