புதுச்சேரி

புதுச்சேரியில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு லாஸ்பேட்டை பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் ஆண்கள் தின விழா

புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி லாஸ்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவ மாணவிகளின் சந்திப்பு மற்றும் ஆண்கள் தின விழா கொண்டாட்டம் அபிராமி ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.

முதலமைச்சர் ரங்கசாமி பயின்ற பள்ளி என்ற சிறப்புக்குரிய இப்பள்ளியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று கூடினர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு சந்தித்த நண்பர்கள், பள்ளிப்பருவ நினைவுகள், வகுப்பறை அனுபவங்கள் மற்றும் அப்போதைய விளையாட்டுச் சம்பவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

மேலும், முன்னாள் மாணவிகளின் சார்பில் ஆண்கள் தினவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் ஜி.வி. கிருஷ்ணமூர்த்தி, பொன்னப்பன், பழனி, சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

English summary: Former students of the Lawspet government middle school in Puducherry, the school where Chief Minister Rangasamy studied, held a reunion and a Men’s Day celebration at the Abirami Residency hotel. More than 40 former students who studied there about 50 years ago gathered, shared school memories, and the former women students organised the Men’s Day greetings. Businessman G.V. Krishnamurthy and others attended.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன