புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 55 பெண்களுக்கு ஸ்ரீரைஸ் அமைப்பு சார்பில் விருதுகள் வழங்கி கவுரவிப்பு
புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி சென்பகா கன்வென்ஷன் ஹாலில் ஸ்ரீரைஸ் பெண்கள் சாதனையாளர் விருது விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுமார் 55 பெண்களுக்கு அவர்களின் சாதனைகள் மற்றும் திறமைகளைப் பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ டாக்டர் நலினி, ரூபல் ராணா ஐ.ஏ.எஸ்., சந்திரபிரியங்கா, டாக்டர் ரச்சனா சிங் ஐ.பி.எஸ். மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். ஸ்ரீரைஸ் அமைப்பின் நிறுவனர் ரூபினி மோகன் மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.
பெண்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் அவர்களின் தனித்துவத்தை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு சிறந்த மேடையாக ஸ்ரீரைஸ் அமைப்பு செயல்பட்டு வருவதாகவும், சாதனை படைத்த பெண்களை மட்டுமன்றி தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக்காக காத்திருக்கும் பெண்களையும் ஊக்குவிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
English summary: The SriRise Women Achievers Award function was held at Sembaga Convention Hall in Puducherry, where about 55 women from various fields were honoured for their achievements. Special guests included Padma Shri Dr. Nalini, Rubal Rana IAS, Chandrapriyanka, Dr. Rachana Singh IPS and Bhuvaneswari, and the organisation’s founder Rubini Mohan and members welcomed them. The organisation said it aims to encourage both achievers and women waiting for an opportunity to show their talents.