புதுச்சேரி தண்டுமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது
புதுச்சேரி, நவம்பர் 3: புதுச்சேரி சின்ன சுப்பராய பிள்ளை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டுமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு 10 நாட்களும் சிறப்பு அபிஷேகமும் தினமும் ஒரு அலங்காரமும் செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காலை அபிஷேகம், அலங்காரம், கஞ்சி வார்த்தல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை வணங்கி சென்றனர். கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
English summary: A swing festival (oonjal utsavam) was held at the Arulmigu Sri Thandumuthu Mariamman temple on Chinna Subbaraya Pillai Street in Puducherry as part of the Navaratri festival. Special abhishekam and a different decoration were performed on each of the 10 days, and the day’s rituals included morning abhishekam, kanji distribution and deepa aradhana. Devotees attended in large numbers and were given prasadam and food.
