தமிழ்நாடு

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுக்கூட்டம்!

கோவை: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கழகத்தின் சார்பில் எழுச்சிமிகு பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உற்சாகமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் கே.ஆர். ஜெயராம் எம்.எல்.ஏ., நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான 24-வது வட்டக் கழகச் செயலாளர் எஸ். லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.

விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கழக முன்னோடிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். அப்போது, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும், கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலில் கட்சி ஆற்றி வரும் மக்கள் பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் திரளான கழகத் தொண்டர்கள் கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பித்தனர். விழாவின் நிறைவாகக் கட்சி கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி 55-வது ஆண்டு துவக்கம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன