தேசியம்

அருணாச்சலப் பிரதேசத்தில் அணைக்கட்டு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

பாசிகாட், அக்டோபர் 25: பாஜக ஆளும் அருணாச்சலப் பிரதேசத்தில் மிகப்பெரிய அணைக்கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் காவல் நிலையம் உள்ளிட்ட கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

சியான் ஆற்றின் குறுக்கே அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து பாசிகாட் நகரில் 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்திற்கு போராட்ட குழு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் தொடர் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் தேசிய நீர்மின் கழக அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களை தாக்கி தீ வைத்ததுடன், தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஓனி பனியாங் வீட்டையும் சூறையாடியதாக மாநில முதலமைச்சர் பெமா காண்டோ தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன