ஊசுடில் ஜனநாயகத்தை காப்போம் வன்முறையாளர்களை அகற்றுவோம் முழக்கத்துடன் பாஜக முக்கியஸ்தர்கள் சந்திப்பு கூட்டம்
புதுச்சேரி, அக்டோபர் 26: புதுச்சேரி மாநிலம் ஊசூடு தொகுதியில் ஜனநாயகத்தை காப்போம் வன்முறையாளர்களை அகற்றுவோம் என்ற முழக்கத்தை முன்வைத்து தொகுதி முக்கியஸ்தர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் ஏம்பளம் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் பாபு, தீப்பாய்ந்தான், மாநில துணைத் தலைவர்கள் ஜெயகுமார் ரெட்டியார், ரவிச்சந்திரன், கார்த்திகேயன், ஊசூடு தொகுதி தலைவர் சிவசங்கர் மற்றும் நாராயணன், ராமச்சந்திரன், கணபதி, அருணகிரி, மனோகரன், மீனா, நாகராஜன், பழனி, முனுசாமி, உதயா, பிரசன்னா, லட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
அரசியல் மற்றும் பொதுவாழ்வில் வன்முறைகளுக்கு இடமளிக்காமல் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் ஊசூடு தொகுதியில் பாஜக அமைப்பை மேலும் வலுப்படுத்துதல், கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல், தொண்டர்கள் இடையே ஒற்றுமையை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் பிரச்சனைகளைக் கண்டறிந்து தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.