தமிழ்நாடு
பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்
சென்னை, அக்டோபர் 25: பிரபல சமையல் கலை நிபுணர் செஃப் தாமு உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
சமையல் கலையில் சிறப்பான பங்களிப்பின் காரணமாக பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள அவர், 24 மணி நேரத்தில் 617 விதமான உணவுகளை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்த பெருமைக்குரியவர் ஆவார்.
செஃப் தாமுவின் மறைவு சமையல் கலைத்துறைக்கு பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் விஜய், தனது தனித்துவமான அணுகுமுறையால் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர் அவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.



